Published on 12/03/2020 | Edited on 12/03/2020
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முற்றிலும் முடிவடைந்து, இறுதி பணிக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இணை தயாரிப்பாளர் லலித் குமாரின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையிட்டனர்.
இந்நிலையில் தற்பொழுது இன்று காலை 11 மணி முதல் ஏற்கனவே பிகில் பட விவகாரத்தில் நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்திய அதே 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தற்பொழுது பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.