மீ டூவில் புகார் கூறியதால் இப்போது எனது பாடல் வாய்ப்பும், டப்பிங் குரல் கொடுக்கும் வாய்ப்பும் பறிபோயிருக்கிறது என்று புலம்பியிருக்கிறார் பாடகியும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுமான சின்மயி.
ஆங்கில நாளிதழ் தி ஹிண்டுவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “மாதத்துக்கு 10 முதல் 15 பாடல்கள் பாட வாய்ப்பு கிடைக்கும். அவற்றில் குறைந்தது 5 பாடல்கள் தமிழில் இருக்கும். ஆனால், இப்போது எனது பாடல் வாய்ப்புகள் பறிபோயிருக்கின்றன. அதோடு, படங்களுக்கு டப்பிங் பேசும் வாய்ப்பும் இல்லை. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனிலிருந்து என்னை டெர்மினேட் செய்திருக்கிறார்கள்.
டப்பிங் யூனியனின் பைலா படி எனக்கு யூனியனுடன் ஒரு பிரச்சனை என்றால் மீடியாவிடமோ, போலீஸிடமோ புகார் கொடுக்க முடியாது. பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் துன்புறுத்தல் என்றால்தான் வழக்கு பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது. ஆனால், சினிமா தொழிலாளர்களான நாங்கள் ஃப்ரீலேன்சர்கள் என்ற பட்டியலில்தான் இருக்கிறோம். எங்களுக்கான வேலை இடம் எது என்பதை எப்படி உறுதிசெய்வது? டைரக்டரின் வீடாக இருக்கலாம், பாத்ரூமாக இருக்கலாம், காபி ஷாப்பாக இருக்கலாம். எது வேண்டுமானாலும் ஷூட்டங் ஸ்பாட்டாக இருக்கலாம். எனவேதான் புதிய சட்டம் வேண்டும்” என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
சினிமா தரப்பினரோ, சின்மயியை எப்படி நம்பி வாய்ப்பு கொடுப்பார்கள். வாய்ப்புக் கொடுப்பவர்கள் மீதே நாளை மீ டூ புகார் கொடுக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்? என்றைக்கோ நடந்ததாக புகார் சொல்லும் இவர், இப்போதிருக்கிற நிலையில் என்னவெல்லாம் புகார் கொடுப்பாரோ என்று பயப்பட மாட்டார்களா? என்று கேட்கிறார்கள்.