Skip to main content

அரிவாளால் வீட்டை சேதப்படுத்திய வழக்கறிஞர் கைது! 

Published on 30/07/2022 | Edited on 30/07/2022

 

Advocate arrested by police who damaged house

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் அடுத்துள்ள ஆதிமாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் வழக்கறிஞர் மாரப்பன். இவர், கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவராகவும் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்கின்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். 

 

மகன் வெளி நாட்டில் படித்து வரும் நிலையில், மாரப்பனும் வெளியூர் சென்றுள்ளார். அவரது மனைவி வீட்டில் தனியாக நேற்று இரவு தூங்கியுள்ளார். வழக்கம் போல் இன்று காலை தூங்கி எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க சுற்று சுவரில் வைக்கப்பட்டிருந்த முகப்பு விளக்குகள் சேதப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவு 1.30 மணியளவில் காரில் வந்த இளைஞர், அரிவாளால் முகப்பு விளக்குகளில் ஒன்றை கழட்டி எடுத்துக் கொண்டும், மற்றொன்றை உடைக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. இது தொடர்பாக மஞ்சு தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் செல்லாண்டிபாளையத்தை சார்ந்த வழக்கறிஞர் பாலசுப்ரமணி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்