திருவண்ணாமலையில் கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நவம்பர் 5 ஆம் தேதி மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவளிப் பண்டிகை பரிசாகக் கூட்டுறவுக் கடைகளின் மூலம் ரூபாய் 2,000 வழங்கப்படும் என்ற தகவல் தவறானது, அதை யாரும் நம்ப வேண்டாம். அரசிடம் அப்படியொரு திட்டம்மில்லை என்றார்.
'ஒரே நாடு ஒரே திட்டம்' சர்வர் பிரச்சினையால் முடங்கியுள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் சர்வர் பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும். தற்போது மைக்ரோ சிப் மூலம், அனைவருக்கும் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளின் மூலம் பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது குறித்த கேள்விக்கு, மக்கள் வாங்கி விற்கிறார்கள், அதை மற்றவர்கள் வாங்கிச் செல்கிறார்கள். அப்படி வாங்கி எடுத்துக்கொண்டு செல்வது தவறில்லை எனச் சொல்ல பரபரப்பு ஏற்பட்டது.