Skip to main content

தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.! (படங்கள்)

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

சென்னையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (08/07/2021) மாலை நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க. கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க.வின் நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான விஜிலா சத்யானந்த் தி.மு.க.வில் இணைந்தார்.

 

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க.வின் பொருளாளரும், அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜிலா சத்யானந்த், "ஜெயலலிதா தந்தது போல் அ.தி.மு.க.வில் மகளிருக்கு வாய்ப்புகள் தரப்படவில்லை" என குற்றம்சாட்டினார்.  

 

 

சார்ந்த செய்திகள்