Skip to main content

முன்னாள் அதிமுக எம்.பி. ராமச்சந்திரன் குற்றவாளி- சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

லஞ்சம் தந்து கடன் பெற்ற வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் அதிமுக எம்.பி. ராமச்சந்திரன் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 

'சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் கல்லூரி விரிவாக்கத்துக்கு கடன் பெற லஞ்சம் தந்ததாக அதிமுக முன்னாள் எம்.பி கே.என்.ராமச்சந்திரன்,  வங்கி மேலாளர் தியாகராஜன், ராமச்சந்திரனின் மகன் ராஜசேகரன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

ADMK EX MP CASE JUDGEMENT CHENNAI SPECIAL COURT


இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் உள்பட மூன்று பேரும் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த மூன்று பேருக்கான தண்டனை விவரத்தை பிற்பகல் 03.00 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதி ரமேஷ் தெரிவித்தார். 
 

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி உறுப்பினராக கே.என்.ராமச்சந்திரன் 2014 முதல் 2019 வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்