Skip to main content

மறு தேர்தலை முறையாக நடத்த வேண்டும்! கலெக்டரிடம் மனு கொடுத்த திமுக வேட்பாளர்கள்!!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

 


கடந்த 18 ம்தேதி தேனி பாராளுமன்றத் தொகுதியோடு ஆண்டிபட்டி மற்றும் ‌பெரியகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும்  நடந்து முடிந்தது. 
       

o

 

இந்த தேர்தலின் போது ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள பாலசமுத்திரம்‌  மற்றும் பெரிய குளம் தொகுதியில் உள்ள வடுகபட்டி வாக்கு சாவடியில்   மாதிரி வாக்குடனே ரெகுலர் ஓட்டுகளும்  பதிவாகி விட்டது. இந்த விஷயம் அதிகாரிகளுக்கு  தெரிந்ததின் பேரில் மாதிரி வாக்குகள் கணக்கில் வராது என்று  கூறிவிட்டனர்.  அதனால்  தேர்தலிலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக தேர்தலும் நடந்தது.   அப்படி இருக்கும் போது திடீரென தேர்தல் ஆணையம் 50 வாக்கு மிஷினை தேனி தாலுகா அலுவலகத்தில் இறக்கியதின்  மூலம் அரசியல் வாட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

     இந்த நிலையில் தான் தேர்தல் ஆணையம் திடீரென ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள பாலசமுத்திரம், பெரியகுளம் தொகுதியில் உள்ள வடுகபட்டி  ஆகிய இரண்டு பூத்துகளிலும் மட்டும்  வருகிற 19 ம்தேதி மறு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


     அதை தொடர்ந்து தான் எதிர் கட்சியை சேர்ந்த ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் மகாராஜன், பெரியகுளம் திமுக வேட்பாளர் சரவணக்குமார் தலைமையில் பொறுப்பில் உள்ள உ.பிகளும் கூட்டணி கட்சியினரும் மாவட்ட கலெகடரும் தேர்தல் அதிகாரியுமான பல்லவி பல்தேவை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

 

p


  அதில்,  மறுதேர்தல் கோரிக்கையை நாங்கள் வைக்க வில்லை. அப்படி இருக்கும் போது இரண்டு தொகுதிகளில் உள்ள பாலசமுத்திரம், வடுகபட்டி ஆகிய பூத்துகளில் மறு தேர்தல் அறிவித்து இருக்கிறார்கள்.    இருந்தாலும் பரவாயில்லை; ஆனால் அந்த மறு வாக்கு பதிவு முறையாக நடைபெற வேண்டும்.  ஆளும் கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மறுவாக்கு பதிவின் போது கள்ள ஓட்டும், வாக்காள மக்களுக்கு இடையூறும் செய்வார்கள்.  அதனால் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி வாக்காள மக்கள் சுதந்திரமாக இரண்டு ஓட்டுகள் போட ஏற்பாடு செய்யவேண்டும். அதோடு ஓட்டு பெட்டிகளையும் தனி தனியாக வைத்து  எடுத்து சொல்லவேண்டும். அதோடு வரும் 23 ம்தேதி ஓட்டு எண்ணிக்கையின் போதும் கூடுதல் போலீஸ் போட வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுருத்தி  மனுவை கொடுத்துள்ளனர்.   


அதை கேட்ட  மாவட்ட கலெக்டர் பல்லவியும் கூட மறு தேர்தலிலும் ஓட்டு எண்ணும் இடத்திலும்  எந்த பிரச்சனையும் வராது போலீஸ் பாதுகாப்பு பலபடுத்தப்படும் என உத்திரவாதமும்  திமுக வேட்பாளர்களுக்கு கலெக்டர் கொடுத்துள்ளார் ஏற்கனவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பிலும் கூட வாக்கு எண்ணும் இடத்தில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
.

சார்ந்த செய்திகள்