Skip to main content

ஆடை குறித்த நடிகர் சதீஷின் பேச்சு; எழும் கண்டனக் குரல்கள்

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

Actor Satish's speech on dress; voices of condemnation

 

வீரா சக்தி மற்றும் கே.சசிகுமார் ஆகியோர் தயாரிப்பில் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக டிக்டாக் மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து நடித்துள்ளார்.

 

'ஓ மை கோஸ்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 02.11.2022 அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், சன்னி லியோன் உட்பட படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சதீஸ், “மும்பையைச் சேர்ந்த சன்னி லியோனே நமது பாரம்பரிய உடையான சேலையில் வந்திருக்கிறார். கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா எப்படி உடையணிந்து வந்திருக்கிறார் பாருங்க” எனப் பேசியிருந்ததற்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.

 

சதீஷின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் நவீன், 'சன்னி லியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. சதீஷ் சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான். மாற்றமே கலாச்சாரம்' என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல் பாடகி சின்மயி, 'ஆண்களின் இந்த நடத்தை எப்போது நிறுத்தப்படும்? அது வேடிக்கை இல்லை' என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்