Published on 10/10/2019 | Edited on 10/10/2019
#ரஜினி_பயத்தில் திமுக என்பது ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
விவகாரம் இதுதான்- கடந்த 20-9-2019 அன்று மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியிலுள்ள அரசுப் பள்ளியை ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி புதுபித்தது. அதனைத் திறந்து வைத்தார் மாவட்ட செயலாளரான சந்தானம். இடைப்பட்ட நாட்களில் என்ன நடந்ததோ தெரியவில்லை.

அந்தக் கல்வெட்டு மாயமானது. கல்வெட்டைப் பெயர்த்தெடுத்தவர்கள் திமுகவினர்தான் என்று கருதிய ரஜினி ரசிகர்கள், அந்த வேகத்தோடு ட்விட்டரில் #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கிவிட்டனர். சின்னதாக ஒரு நூல் கிடைத்தாலும் அதைப் பிடித்தபடி முன்னேறுவதுதானே அரசியல்! கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே ரஜினி ரசிகர்களும் ‘அரசியல்’பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.
