மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அமல்படுத்த முடிவு: செங்கோட்டையன்
மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வி வளர்ச்சிக்காக சிறப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். மத்திய அரசு கொண்டு வரும் பொது தேர்வுகளை மாணவர்கள் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில் 412 பயிற்சி மையங்கள் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் 2 மாதத்திற்குள் முடிக்கப்படும். இந்தியாவிலேயே முதன் முறையாக மாணவ-மாணவிகளுக்கான விபத்து காப்பீடு திட்டத்தை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.