கோவை விமான நிலையம், எப்பொழுதும் போல் இன்றும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. வெளிநாட்டுக்குச் செல்லக் கூடிய பயணிகள் மற்றும் உள்நாட்டு மாநிலங்களுக்குச் செல்லக் கூடிய பயணிகள் என விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
மத்திய புலனாய்வுப் பிரிவு போலீசார், கலால் பிரிவு போலீசார், விமான நிலைய போலீசார் ஆகியோரும் அவர்களின் வழக்கமான சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சசிகுமார் சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார்.
அவருடைய பையைப் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அதில், 92 பிஸ்டல் தோட்டாக்களின் தற்போது உள்ள மாடலை மொத்தமாக வைத்திருந்தார். அது 25 mm அளவுள்ளது. உடனடியாக சி.ஐ.எஸ்.எஃப் போலீசார் அதைப் பறிமுதல் செய்து அவரிடம் விசாரித்தனர். அதற்கு அவர் சரியான பதிலை கொடுக்கத் தவறியதால், தொடர்ந்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். அதனால் இன்று காலை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
போலீசார் தொடர்ந்து, 92 நடைமுறையிலுள்ள தோட்டாக்களை எதற்காக மொத்தமாக எடுத்து வந்தார்? இதற்கு எப்படி அனுமதி பெற்றார்? என்ற கேள்விகளோடு விசாரித்துவருகின்றனர். இவர் ஏர் பிஸ்டல் வைத்திருக்க முறையான அரசு அனுமதி பெற்றுள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.