இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதிமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்தி எதிர்ப்பை கண்டித்து மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பு இந்திய எதிர் போராட்டத்தில் உயிர் நீர்த்தோருக்கு மரியாதை செலுத்தினர். மத்திய அரசு இந்துணிப்பு செய்யக்கூடிய நடவடிக்கைகளை கைவிட வேண்டும், புதிய கல்விக் கொள்கை மூலமாக இந்தி திணைப்பை செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதனை முற்றிலுமாக அரசு மத்திய அரசு கைவிட வேண்டும். இந்தி திணிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டால் இந்திய நாட்டினுடைய மொத்த ஒற்றுமையும் சீர்குலைப்பதற்கான அச்சுறுத்தலாகவே இருக்கும். தமிழகத்தில் ஆளுநர் மூலமாக இந்தியை திணிக்கும் நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.