Published on 27/11/2023 | Edited on 27/11/2023

ஆவினில் இனிப்பு கார வகைகள் செய்வதில் 12 லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
ஈரோடு ஆவின் நிறுவனத்தில் கடந்த 2021 ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு கார வகைகள் செய்ய வழங்கப்பட்ட உத்தரவில் 12 லட்சம் முறைகேடு எழுந்தது. மேலும், 2500 கிலோ நெய் ஆவினில் எடுக்கப்பட்டு வெளியே விற்பனை செய்யப்பட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுப்பிரமணி என்கிற விவசாயி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் மேலாளர் சபரிராஜன், மோகன்குமார், கோவை ஆவின் பொது மேலாளர் பாலபூபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்.