Skip to main content

ப்ளஸ் 1 பொதுத்தேர்வில் 90.07% பேர் தேர்ச்சி

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

90.07% pass in Plus 1 General Examination!

 

ப்ளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம். 

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 1 பொதுத்தேர்வில் 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சுமார் 8,43,675 மாணவ, மாணவியர்கள் பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில், 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ப்ளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.99%, மாணவர்கள் 84.86% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 84.86% பேர் தேர்ச்சி பெற்றதாகவும், மாணவிகளில் 94.99% பேர் தேர்ச்சி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ப்ளஸ் 1 பொதுத்தேர்வில் கடந்த 2020- ஐ விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சுமார் 6% குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்