நேற்று (27.01.2021) சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள 'வேதா இல்லம்' அரசுடைமையாக்கப்பட்டு 'ஜெயலலிதா நினைவு இல்லம்' என மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி இல்லத்தை திறந்து வைக்க, துணைமுதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிலையில் தற்போது, சென்னை கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் லேடி வெலிங்டன் கல்லூரியிலுள்ள உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டி, அங்கு அமைக்கப்பட்டுள்ள 9 அடி உயரம் கொண்ட ஜெலலிதாவின் வெண்கல சிலையை முதல்வரும், துணை முதல்வரும் திறந்து வைத்தனர். ட்ரோன் மூலம் சிலை திறந்துவைக்கப்பட்டு மலர் தூவப்பட்டது.
சிலை திறக்கப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் அண்ணா பல்கலைகழக மாணவர்களுடன் சேர்ந்து நடிகர் அஜித் வடிவமைத்த ட்ரோன் என்பது கூடுதல் தகவல்.