கோவையில் ரோட்டரி கிளப் சார்பில் இயற்கையின் வழித்தடங்களான சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக 70 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற 2018,19 ஆம் ஆண்டின் இயற்கையின் வழிதடங்களான சுற்று சூழலை தூய்மை செய்யும் வகையில் ரோட்டரி கிளப் மற்றும் கரோனா என்ற அமைப்பு இணைந்து நிர்வாகிகளுக்கு பதவி ஏற்புவிழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பேசிய ரோட்டரி கிளப்பின் புதிய கவர்னர் ஏவி. பதி ரோட்டரி கிளப் சார்பில் கோவையை சுற்றிலும் 10 லட்சம் மரக்கன்றுகள் மற்றும் 10 லட்சம் லிட்டர் சுகாதாரம் குடிநீர் கிடைக்கவும் ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவித்தொகை என ஒவ்வொரு பிரிவிற்கும் 10 லட்சம் என ஏழு பிரிவிற்கு 70 லட்சம் வரை திட்டங்களை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் ,இது மட்டுமல்லாமல் மனித நேயத்தின் போற்றுதலாக ரோட்டரி தலைமை நிறுவனத்திற்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்களை பங்களிப்பு செய்ய உள்ளதாக தெரிவித்தார். இவ்விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
.