வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள புதிய மாங்கனி அரங்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி 11 நாள் ஆகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாள் அன்று விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும்.
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு விஷம் போல் உயர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு லிட்டர் 85.41 டீசல் 78.5 என அதிபயங்கர விலை அதிகமாக உள்ளது. கடந்த ஐம்பது நாட்கள் மற்றும் முப்பத்தி ஒரு முறை உயர்ந்துள்ளது. மக்களை நசுக்குவது முறையல்ல. ஆந்திரம் கர்நாடக மாநிலத்தில் விலை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் விலையை குறைக்க முன்வர வேண்டும்.
வரும் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டுள்ளது ஆனால் பிளாஸ்டிக்கை தடுக்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை பிளாஸ்டிக் மாற்றுப் பொருள் தயாரிக்க இப்பொழுது முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் நமக்கும் பொருட்களை அதிக அளவில் தயார் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து கட்டாயமாக ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் காரணம் காட்டி தள்ளிப்போடக்கூடாது என்றார்.