தமிழகத்தில் உள்ள 7 கோடி பேரும்
கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளது:பொன்னார்
மதுரை விமான நிலையத்தில் மத்திய நிதி துறை இணை அமைச்சர் பொன்.இராதா கிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பொன்னார், ‘’மதுரை விமான போக்குவரத்து சேவையில் ஓரு மைல் கல்லாக மதுரை முதல் சிங்கப்பூர் வரை ஆரம்பிக்கப்பட் டுள்ளது. இன்று முதல் ஏர் இந்தியா நிறுவனம் மதுரை -டெல்லி ,மதுரை - சிங்கப்பூர் நேரடி சேவையை துவக்குகின்றது. டெல்லி மதுரை புறப்பாடு மதியம் 1.50 வருகை 5.05 மாலை பின்னர் இரவு 11.15 மதுரையிலிருந்து சிங்கப்பூர் 6.15 சேருகின்றது.
மதுரை மூவேந்தர் ஆண்ட காலத்தில எப்படி் புகழ் பெற்றதோ அதே போல் மதுரையும் புகழ் பெற விரும்புகிறேன்.
ஜாக்டோ ஜியோ அமைப்பிற்கு உயர்நீதி மன்றம் தடை குறித்து கேட்டதற்கு தொழிலாளார்கள் எல்லா பிரச்சனைக்கும் தெருவில் இறங்ககூடாது.
அதே போல் அரசாங்கமும் தெருவுக்கு வரக்கூடிய சூழ்நிலையை உருவாக்க கூடாது. இது அரசின் கடமை
அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் தமிழ்நாடு என நினைக்கிறேன்.
கமல் சொல்லியுள்ள கருத்து மக்கள் பிரதிநிதிகள் அவர்கள் கடமை செய்யவில்லை என்றால் சம்பளம் பிடிமானம் இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அவர் துறைக்கு பிரச்சனை வரும் போது தான் அது தெரியும் என தெரிவித்தார்.
கமல் கட்சி தொடங்கினால் தொடங்கட்டும். 7 கோடி மக்கள் தமிழகத்தில் உள்ளார்கள். 7 கோடி பேரும் கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ள பிஜேபி, பிஜேபி கட்சி உறுப்பினர்கள் தனி கட்சி தொடங்க மாட்டார்கள்’’ என பொன்.இராதா கிருஷ்ணன் கூறினார்.
-முகில்