வேலை வாய்ப்பிற்காக துபாய் சென்ற ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ஆறு மீனவர்கள் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சனிக்கிழமை காலையன்று, வயிற்று பிழைப்பிற்காக மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா களிமண்குண்டு பகுதியில் பூமி , மங்களேஸ்வரி நகரில் பால்குமார், வைரவன் கோவில் சதீஸ், கல்காடு கிராமம் துரைமுருகன், அலெக்ஸ்பாண்டியண் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டிணத்தை சேர்ந்த மில்டன் ஆகிய 6 பேரும் துபாய் நாட்டில் மீன்பிடிக்கச் சென்றனர். மீன் பிடிக்கும் போது இவர்கள், எல்லைத் தாண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு ஈரான் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் மீனவர்கள் மத்தியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.