Published on 08/02/2022 | Edited on 08/02/2022
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 12,607 பதவியிடங்களுக்கு 57,778 போட்டியிடுகின்றனர். 1,370 மாநகராட்சி வார்டுகளுக்கு 11,196 பேரும், 3,825 நகராட்சி வார்டுகளுக்கு 17,922 பேரும் போட்டியிடுகின்றனர். 7,412 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 28,660 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 இடங்களில் 218 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, பதிவான வாக்குகளை எண்ணும் பணி பிப்ரவரி 22- ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.