5,8- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடடுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 5,8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் அதற்கான அரசாணையை கடந்த 2019- ஆம் ஆண்டு செப்டம்பர் 13- ஆம் தேதி அரசு வெளியிட்டது. அரசின் முடிவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதையடுத்து 5,8- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று கடந்த பிப்ரவரி 4- ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் 5,8- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் பழைய நடைமுறைப்படியே 5 மற்றும் 8- ஆம் வகுப்புக்கு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.