Published on 15/10/2018 | Edited on 15/10/2018
கீழடியில் 4ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி முடிந்ததை அடுத்து, அகழ்வாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்தப்பணி 3 நாட்கள் நடைபெறும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 30 வரை நடந்த 4ம் கட்ட அகழாய்வு பணி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் அப்போது குழிகளை மூட இயலவில்லை. இதன் காரணமாகவே தற்போது குழிகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு 5ம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு அனுமதி தந்த பின் மீண்டும் வேலைகள் தொடங்கும்.
இந்த கீழடி அகழாய்வில் தங்க ஆபரணங்கள், பிராமி எழுத்துக்கள், கட்டட பகுதிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.