Published on 10/07/2022 | Edited on 10/07/2022
தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடைகளில் விற்கப்பட்டு வந்த குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், 42 கடைகளுக்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடைகளில் விற்பது சட்டப்படி குற்றம். இந்த நிலையில் பான்பராக், குட்கா போன்றவற்றை கடைகளில் வைத்து தொடர்ந்து விற்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் குவிந்தன. இதனடிப்படையில் தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆண்டிப்பட்டி, கம்பம், போடி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். போலீசாரின் துணையுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் சட்ட விரோதமான முறையில் வைத்து விற்கப்பட்டு வந்த போதை பொருட்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், 42 கடைகளுக்கு சீல் வைத்தனர்.