Skip to main content

இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர்

Published on 22/10/2017 | Edited on 22/10/2017
இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர்

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்தநிலையில், ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த அருள்பிரகாஷ் என்பவரின் படகில் மீனவர்கள் 4 பேர் நேற்று முந்தினம் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ரீகன், எமர்சன், மாரியப்பன் உள்ளிட்ட 4 மீனவர்களை கைதுசெய்தனர். மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு படகையும் அவர்கள் சிறைபிடித்துச் சென்றனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதுசெய்யப்பட்ட 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்