சென்னையில் கள்ளத்துப்பாக்கியுடன் 4 பேர் கைது
சென்னையில் கள்ளத்துப்பாக்கியுடன் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் பிரபல ஓட்டல் அருகில் அருகே காத்திருந்தபடியே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கள்ளத்துப்பாக்கி கும்பலை மடக்கி பிடித்தனர். வியாசர்பாடி கன்னிகா புரத்தை சேர்ந்த கோபி நாத், அண்ணாநகர் ஆர்.வி.நகரை சேர்ந்த முருகன், மதுராந்த கத்தை சேர்ந்த குமார், பிரகாஷ் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரிடமிருந்தும் ஒரு கள்ளத்துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த துப்பாக்கி 9 எம்.எம்.பிஸ்டல் ரகத்தை சேர்ந்ததாகும். மாறு வேடத்தில் இருந்தது போலீஸ் என்று தெரியாமல் கைதான 4 பேரும் ரூ.5 லட்சத்துக்கு பேரம் பேசியுள்ளனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படங்கள்: அசோக்குமார்