Published on 16/08/2022 | Edited on 16/08/2022

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்புப் பணிகளும் தீவிர படுத்தப்பட்டிருந்தது. தமிழக அரசு சார்பிலும் விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதேநேரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சுதந்திர தினத்திற்கு முந்தைய தினமான ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் மொத்தமாக தமிழகத்தில் 273.92 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 58.26 கோடி ரூபாய்க்கும், சென்னை 55.77 கோடி ரூபாய், சேலம் 54.12 கோடி ரூபாய், திருச்சி 53.48 கோடி ரூபாய், கோவை 52.20 கோடி ரூபாய் என கல்லா கட்டியுள்ளது டாஸ்மாக்.