
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. வரும் 13-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும்,வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர இருக்கின்றனர் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சிறப்புப் பேருந்து நிலையங்கள், கார் பார்க்கிங் வசதிகள் என பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. திருவண்ணாமலை நகருக்கு வரும் ஒன்பது சாலைகளில் 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 116 கார் பார்க்கிங் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலையில் அனுமதியின்றி அன்னதானம் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.