ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது
புதுடெல்லியில் இருந்து மும்பை லோக்மான்யா திலக் டெர்மினஸ் ரெயில் நிலையத்துக்கு சம்பவத்தன்று ராஜ்தானி எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. அதில், 2 பேர் போதைப்பொருட்களுடன் வருவதாக மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், லோக்மான்யா திலக் டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் வந்தடைந்ததும் அதில் இருந்து இறங்கிய நைஜீரிய நாட்டு பிரஜைகள் 2 பேரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அவற்றில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 20 கிலோ போதைப்பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்ப இருந்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.