2 நாட்களில் முடிவை அறிவிப்பேன்:கருணாஸ்
இபிஎஸ்-ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என இரு அணிகளில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மூன்று எம்.எல்.ஏக்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி நீடிக்கிறது.
இந்நிலையில், நெல்லையில் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய இருவரிடமும் கலந்து ஆலோசித்து 2 நாட்களில் முடிவை அறிவிப்பேன்’’என்று தெரிவித்தார்.