Skip to main content

ரூ.17 லட்சம் கடன்; தாயைக் கொன்ற மகன்

Published on 25/10/2022 | Edited on 25/10/2022

 

17 lakh loan; The son who arrested in his mother passed away case

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் உள்ள பாக்கம்பாடி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி வேலம்மாள்(60). இவர்களுக்கு சுரேஷ்(31), வேல்முருகன்(29), செல்வி(25) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி அவரவர்கள் குடும்பத்தோடு தனித்து வசித்து வருகிறார்கள். வேலம்மாள் கணவர் இறந்துவிட்டதால் தனது மூத்த மகன் சுரேஷ் என்பவருடன் தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வருகிறார். 

 

முருகேசன் இறப்பதற்கு முன்பு குடும்ப செலவினங்களுக்காக ரூ. 17 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். இதனை இரண்டு மகன்களும் அடைக்க வேண்டும் என அவரது தாய் வேலாம்மாள் தெரிவித்துள்ளார். 

 

இது சம்பந்தமாக சகோதரர்கள் சுரேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று தீபாவளியை முன்னிட்டு மாலை 4 மணி அளவில் வேல்முருகன் தனது தாயாரை பார்ப்பதற்காக ஆறகளுரில் இருந்து பாக்கம்பாடி காட்டுக்கொட்டாய் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு அவரது உறவினர் கௌதம் என்பவரும் இருந்துள்ளார். அதேசமயம் ரூ. 17 லட்சம் கடன் அடைப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பேச்சுவார்த்தையில் சகோதரர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் சகோதரர்கள் இருவரும் மோதிக் கொண்டனர். 

 

இதைப் பார்த்து அவர்களது தாய் வேலம்மாள் இருவரையும் சமாதானம் செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் மற்றும் கௌதம் ஆகிய இருவரும் சேர்ந்து அங்கு கிடந்த இரும்பு பைப்பால் வேலம்மாளை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வேலம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வேலம்மாள் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இது குறித்து கிழக்கு குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ், கௌதம் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்