சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரசாயனம் கலந்த ஜவ்வரிசி தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வேதிப்பொருட்கள் கலந்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசியைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டை பகுதியில் தனியார் ஆலையில் ரசாயனம் கலந்த ஜவ்வரிசி தயாரிக்கப்படுவதாக தகவல் வந்ததையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நடத்தப்பட்ட ஆய்வில் 300 கிலோ ஹைட்ரஜன் பெராக்சைடு, 400 கிலோ பிளீச்சிங் பவுடர், 210 கிலோ பாஸ்பாரிக் ஆசிட், 150 கிலோ பார்மிக் அமிலம், 9000 கிலோ உலர் ஸ்டார்ச் மாவு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். ஜவ்வரிசி வெண்மையாக இருப்பதற்காக ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு இந்த வேதிப் பொருட்களை பறிமுதல் செய்ததோடு, வேதிப் பொருட்களைக் கலந்து தயாரித்த 16,500 கிலோ ஜவ்வரிசியையும் பறிமுதல் செய்தனர்.