14 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக விஜய்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பு துணை ஆணையராக சுந்தரவடிவேல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக சுனில்குமார் சிங் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபியாக வன்னிய பெருமாள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவலர் நலப்பிரிவு ஏடிஜிபியாக கருணாசாகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவலர் வீட்டு வசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக தமிழ்ச்செல்வன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு வி.பிலிப் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கூடுதல் டிஜிபிக்கள் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர் என்றும், ஏஎஸ்பிக்கள் சுஜித்குமார், ரோஹித் நாதன் ஆகியோர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.