Published on 11/08/2021 | Edited on 11/08/2021
தடைசெய்யப்பட்ட 125 கிலோ பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திருச்சியில் நேற்று மாலை பறிமுதல் செய்தனர். திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபுவிற்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது.
இதனையடுத்து, நேற்று மாலை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள ஒரு கடையை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சுமார் 125 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.