திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பச்சை மலையில் உள்ள டாப் செங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி வைரி செட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அதே பள்ளியில் படித்து வரும் சோபனா புரத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவன் கடந்த சில மாதங்களாக அந்த மாணவியை காதலிப்பதாக கூறி தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் லவ் டார்ச்சர் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக சோபனபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த மாணவியை சந்துரு தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் பள்ளி மாணவி தனது வீட்டில் வைத்து இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பெற்றோர் மாணவியை துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.