10 ஆம் வகுப்பு மாணவனை கடத்தி வந்து சென்னையில் குடும்பம் நடத்தி வந்த ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த பள்ளி ஆசிரியை மரியா. 40 வயதான இவர், தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். கணவரை பிரிந்து வாழும் இவருக்கு 10 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில், மரியா பணிபுரியும் பள்ளியில் 10 வகுப்பு பயிலும் ஒரு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வகுப்பு முடிந்த பிறகும், அந்த மாணவனிடம் அவர் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
மாணவனிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதால், மாணவனுக்கு செல்போன் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் அந்த ஆசிரியை. பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி பழகியுள்ளனர்.
இவர்கள் பேசுவதை ஆசிரியை - மாணவன் என்ற கண்ணோட்டத்திலேயே அனைவரும் பார்த்தார்கள். யாரும் சந்தேகப்படவில்லை. இந்நிலையில், கடந்த 23ம் தேதி மாணவனை காணவில்லை என அம்மாணவனின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர்.
மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மாணவன் பயின்று வந்த பள்ளியிலும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மரியாவும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதில் சந்தேகமடைந்த போலீசார் தனிப்படை அமைத்து அவர்களைத் தேடி வந்தனர்.
ஆசிரியையின் செல்போன் சிக்னலை வைத்து ஆசிரியையும், மாணவனும் சென்னையில்தான் உள்ளனர் என்பதை கேரள போலீசார் கண்டுபிடித்தனர்.
தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய கேரள போலீசார், சென்னை சூளைமேடு வந்து ஆசிரியை பெரோனாவை கைது செய்து மாணவனை மீட்டனர்.
கேரள போலீசாரின் விசாரணையில், தாய் - மகன் என்று கூறி, சூளைமேட்டில் ஒரு அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஆசிரியையை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் போலீசார். ஆசிரியை சிறையில் அடைக்கப்பட்டார். மாணவன் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைப்பட்டான்.