Skip to main content

லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் உணர்ச்சி ததும்ப த.வெ.க கொடியை ஏற்றிய விஜய்!

Published on 27/10/2024 | Edited on 27/10/2024
100 feet flag pole Vijay hoisted the flag

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் தொடங்கியுள்ளது. கொடி அறிமுக விழாவின் பொழுது வெளியிடப்பட்ட 'தமிழன் கொடி பறக்குது' என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப் பாடல் ஒளிபரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பறை ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேற்றப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து மாநாடு மேடைக்கு வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய், தொண்டர்களை நோக்கி நடந்து  தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது அவர்கள் வீசிய கட்சித் துண்டை வாங்கி தனது கழுத்தில் அணிந்து கொண்டு நடந்து வந்தார். அதனைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். 

இதனைத் தொடர்ந்து மாநாட்டு வாயிலில் வைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக் கம்பத்தில் த.வெ.க.வின் கொடியை விஜய் ஏற்றினார். பின்னணியில் கட்சியின் பாடல் இசைக்க லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சி தததும்ப த.வெ.க கொடியை  விஜய் ஏற்றி வைத்தார்.

சார்ந்த செய்திகள்