Published on 16/06/2021 | Edited on 16/06/2021

அரியலூரில் 10 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி அரசிடம் ஓஎன்ஜிசி விண்ணப்பம் அளித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அரியலூர் மாவட்டம் வராத காரணத்தால், ஓஎன்ஜிசி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது ஓஎன்ஜிசி நிறுவனம் அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.