Skip to main content

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

Published on 03/08/2017 | Edited on 03/08/2017
சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில், துபாயில் இருந்து வரும் விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். 

அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆந்திராவை சேர்ந்த பயணி முகமது அப்துல் என்பவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், 42 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்க தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், தங்கத்தை கடத்திவந்த அப்துலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்