Published on 30/05/2019 | Edited on 30/05/2019
திமுகவில் இருக்கும் 3 ராஜ்யசபா சீட்டில் ஒன்றை, ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோவிற்கு கொடுக்கும் எண்ணத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருக்கார். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கிற்கு ஒரு சீட்டை தி.மு.க.விடம் எதிர்பார்க்கிறதாம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையாத நிலையில், தி.மு.க. யோசிக்குதாம்.

அப்புறம், தனக்கு நம்பிக்கைக்குரிய ஒருவர் டெல்லிக்குப் போகணும்ன்னு கட்சி தலைமை நினைப்பதால், கட்சி தலைமைக்கு நெருக்கமானவர்கள் சபரீசனுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலாம்னு சொன்னதாக தகவல் வெளிவந்தது.ஆனால் கட்சி தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே கனிமொழி, தயாநிதின்னு கலைஞர் குடும்பத்தினர் லோக்சபா எம்.பி.யாகியிருக்கிற நிலையில், ராஜ்யசபாவுக்கு ஸ்டாலின் குடும்பத்து ஆளாங்கிற விவாதத்தை உருவாக்கணு மாங்கிற ஆலோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.இதனால் ராஜ்யசபா சீட் கட்சியில் இருக்கும் சீனியர்களுக்கு கொடுக்கப்படலாம் என்ற தகவலை அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.