Skip to main content

’’வாட்ஸ்-அப் பயன்படுத்துவதில் தவறில்லை’’ - கிரண்பேடி பதிலடி

Published on 16/06/2018 | Edited on 16/06/2018
kp

 

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி அரசு அதிகாரிகளுக்கு வாட்ஸ்-அப், டுவிட்டர் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்து வருகிறார்.  முதல்மைச்சர் நாராயணசாமி  வாட்ஸ்-அப், டுவிட்டர் ஆகியவை அரசால் அங்கீகரிக்கப்பட்டதல்ல. இதனால் வாட்ஸ்-அப், டுவிட்டரை பயன்படுத்தக்கூடாது என்று  இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.   வாட்ஸ்-அப் உத்தரவுக்கு பணிந்து செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாராயணசாமி எச்சரித்தார்.

 

இந்த நிலையில் வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவது தவறில்லை.    தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கம்தான் சமூக வலைதளங்கள். இதனை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. மேலும், அவசரமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சமூக வலை தளங்கள் வசதியாக உள்ளது. எனவே, வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவதில் தவறில்லை.

சார்ந்த செய்திகள்

Next Story

''புதுச்சேரிக்கு விடிவுகாலம்... அவரை பாஜக வேட்பாளராக நிறுத்துங்கள்...''-நாராயணசாமி பேட்டி! 

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

narayansamy

 

தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ''கிரண்பேடி அம்மையாரைப் பொறுத்தவரை புதுச்சேரி மாநில மக்களுக்கு விரோதமாக கடந்த 4 ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்தார். புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றுகின்ற மக்கள் நலத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்; அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்; அதிகாரிகளைத் தன்னிச்சையாக அழைத்து உத்தரவிட்டிருக்கிறார்; அதிகாரிகளை வசைபாடியிருக்கிறார்; மக்களுக்குக் கொடுக்க வேண்டிய அரிசியைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.

 

அவரை திரும்பப்பெற வலியுறுத்தி கூட்டணி கட்சிகளுடன் பல போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறோம். கிரண்பேடி நீக்கப்பட்டது புதுச்சேரி மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட கிரண்பேடிக்கு கிடைத்த தண்டனை. புதுச்சேரிக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. கிரண்பேடி அம்மையாரை புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 

 

Next Story

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நீக்கம் - தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

sdf

 

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ச்சியாக ஆளாகிவந்த புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த புதுவை துணைநிலை ஆளுநர் பதவியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இதற்கிடையே ஆளுநரின் பதவி நீக்கத்தை புதுவை எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி வரவேற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநருக்கும், புதுவை அரசுக்கும் கடும் மோதல் போக்கு நிலவிவந்தது குறிப்பிடத்தக்கது.