திருச்சியில் எம்.பி. தொகுதியில் அ.தி.மு.க. எம்.பி. குமார் தொடர்ந்து இரண்டு முறை வெற்றிப்பெற்று 3வது முறையாக போட்டியிட தயாராக இருந்தார். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து போட்டியிடுவதற்கு 15 பேருக்கு மேல் தலைமையில் பணம் கட்டியிருந்தார்கள். அவரவர் அவர்களின் வழிகளில் சீட்டு வாங்குவதற்கான முயற்சியில் இறங்கியிந்தார்கள்.
இந்த நிலையில் பிஜேபி - அ.தி.மு.க. கூட்டணியில் தேமுதிகவை இணைத்தே தீர வேண்டும் என்றும் அ.தி.மு.க. தலைமைக்கு கடுமையான நெருக்கடிகள் கொடுத்த நிலையில் 7 சீட்டு வேண்டும் என்று தேமுதிக பிரேமலதா மற்றும் சுதிஷ் ஆகியோர் பேசி கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் தி,மு.க. தரப்பிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்த நிலையில் தீடீர் என தி.மு.க. எங்களுடைய தொகுதி பங்கீடு முடிந்தது என்று பகிங்கரமாக அறிவித்த நிலையில், திரும்பவும் அ.தி.மு.க. பக்கம் சென்றபோது 4 சீட்டு இல்லை, 3 சீட்டு தான் கிடைக்கும். அதிலும் இரண்டு தனித்தொகுதி என்றொல்லம் பேரம் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் பிஜேபி தலையிட்டு தேமுதிகவிற்கு வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய நான்கு தொகுதிகளை ஒதுக்குங்கள் என கடுமையாக சொல்லிவிட்டார்களாம்.
இதன் அடிப்படையில் தேமுதிகவிற்கு திருச்சி எம்.பி. தொகுதி ஒதுங்கியதாக தெரிகிறது. திருச்சியில் தேமுதிகவை பொறுத்தவரையில் ஏற்கனவே தொடர்ந்து தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஏ.எம்.ஜி விஜயகுமார் என்பருக்கு தான் சீட்டு கிடைக்கும் அல்லது பிரேமலாதா தம்பி சுதிஷ் இங்கு போட்டியிடுவார் என்றெல்லாம் கட்சிக்காரர்கள் ஆருடம் சொல்லிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் திருச்சியில் விஜயகாந்த கட்சி ஆரம்பிப்பதற்கு மிக முக்கியமான ரசிகர்கள் பல பேர் திருச்சியில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் திருச்சியில் விஜயகாந்த மகன் விஜய் பிரபாகரனை திருச்சியில் போட்டியிட சொல்லுங்கள், திருச்சியில் திருவரம்பூர், ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிகளில் கனிசமாக விஜயகாந்த ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏற்கனவே திருச்சியில் வைத்து விஜயகாந்த் மகனுக்கு மாநில இளைஞர் அணி மாநாடு நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதனால் அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்களாம். ஏற்கனவே சுதிஷ் போட்டியிட்டால் எப்படி இருக்கும் என்கிற சர்வே எடுத்த அடிப்படையிலே விஜயகாந்த மகன் தற்போது களம் இறக்கலாம் என்கிற யோசனை இருக்கிறது என்கிறார்கள் விஜயகாந்த கட்சியில் உள்ள மேல் மட்ட நிர்வாகிகள்.
விஜயகாந்த மகன் குறித்து கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது..
'விஜய் பிரபாகரனை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என விஜயகாந்த் விரும்புகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இந்த விருப்பம் உள்ளது. மகனுக்கு உடனடியாக பதவி கொடுத்து விட்டால் சர்ச்சையாகும் என்பதால் படிப்படியாக அரசியலில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார்.
விஜயகாந்துக்கு உருவான செல்வாக்கு அதன் பின்னர் அவரது கட்சியில் இருக்கும் யாருக்கும் உருவாகவில்லை. மகனை களம் இறக்கும்போது மக்களிடம் இழந்த செல்வாக்கையும் இளைஞர்கள் நம்பிக்கையையும் பெற முடியும் என்று நம்புகிறார். தனக்கு பின் கட்சியின் அதிகாரம் முழுவதையும் மகனுக்கு மாற்ற விரும்புகிறார்.
விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்னர் உட்கட்சி பிரச்சனையை ஆராயும் குழு என்ற குழுவைஅமைத்து அதன் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை நியமித்தார். இந்த குழுவுக்கு வரும் புகார்கள் அனைத்தும் விஜய் பிரபாகரன் கவனத்துக்கும் செல்கிறது.
அந்த புகார்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு உண்மை இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படி மெல்ல மெல்ல மகனை கட்சியின் முக்கிய இடத்திற்கு கொண்டு வருகிறார்' இதனால் அவர் பலருக்கு திருப்புமுனை ஏற்படுத்திய திருச்சி எங்கள் விஜயகாந்த மகனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
சமீபத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருவரம்பூர் பகுதியில் கார்வழியாக சென்ற விஜயபிரபாகரனுக்கு 100 கணக்கில் கார் அணி வகுப்பு நடத்தி திருச்சி தேசிய நெடுஞ்சாலையே ஸ்தம்பிக்க வைத்தது குறிப்பிடதக்கது .
ஏற்கனவே தேனியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜயபிரபாகரன் தேர்தலில் போட்டியிட வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.