Published on 01/09/2020 | Edited on 01/09/2020
ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் முருகன் உட்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சியில் மாவட்ட பாஜக அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எல்.முருகனுக்கு தியாகதுருகத்தில் பாஜக தொண்டர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர். இதனையடுத்து, கள்ளக்குறிச்சியில் பாஜக அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அலுவலக திறப்பு உள்ளிட்டவற்றில் ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் கூடியதாக கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் பாஜக தலைவர் முருகன் உட்பட சுமார் 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.