Published on 13/07/2019 | Edited on 13/07/2019
தேசத் துரோக வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமனற்த்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த எம்பி எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதில் முழுமையான ஆதாரம், சாட்சி இல்லாமல் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானது. தீர்ப்பை சட்டப்படி வழங்காமல், யூகங்கள் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ளது. எனவே தனக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். மேலும் மேல்முறையீடு வழக்கு முடியும் வரை இத்தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் கூறியுள்ளார். வைகோவின் மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.