







Published on 05/02/2020 | Edited on 05/02/2020
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திமுக சார்பில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துகள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக திமுக இளையரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னை லயோலா கல்லூரி வாளகத்தில் மாணவர்களிடையே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் பெற்றார்.