Published on 07/02/2019 | Edited on 07/02/2019
குக்கர் சின்னம் கேட்டு டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி கன்வில்கர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ளது. குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததையடுத்து தினகரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பதும், அதைத்தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என தீர்ப்பளித்ததும் குறிப்பிடத்தக்கது.