டெல்லி பா.ஜ.க. தரப்பில் இருந்து திமுக தலைமையை குறிவைப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனைத்தான் முதலில் கண்காணித்து வந்தார்கள். தற்போது சபரீசனோடு படித்து இப்போது நட்பில் இருப்பதாக கூறப்படும் சர்வேஸ் என்ற காவல்துறை அதிகாரியை மத்திய புலனாய்வு அமைப்புக்கு அழைத்துக் கொண்டது டெல்லி. பின்னர் சபரீசனின் ஓ.எம்.ஜி. குரூப்பில் இருந்த சர்வேஸின் தம்பியை அள்ளிக்கொண்டு சென்றது அதிகாரிகள் டீம். சித்தரஞ்சன் சாலை பணம், மாஜி மந்திரி எ.வ.வேலு மூலம் வெவ்வேறு வகைகளில் முதலீடு செய்யப்படுகிறதாமே? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி அவரைத் துருவிக்கொண்டு இருப்பதாக கூறுகின்றனர்.
இப்படி எதையாவது ஒரு அதிகார ஆயுதத்தைக் கையில் வைத்துக்கொண்டு தி.மு.க. தரப்பையும், தன் விருப்பம் போல் ஆட்டிவைப்பதுதான் பா.ஜ.க.வின் திட்டமாக இருப்பதாக கூறுகின்றனர். இதேபோல் ஐ.என்.எக்ஸ். நிறுவன விவகாரத்தில் கைதான காங்கிரஸ் மாஜி மந்திய மந்திரி ப.சிதம்பரத்தை, அந்த வழக்கில் அவர் பெயில் பெற்றதைத் தொடர்ந்து, அமலாக்கப் பிரிவின் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கை தீவிரம் காட்டி, அவரை மனரீதியாக துன்புறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. டெல்லி. திகார் வாசல் படியைக் கூட மிதித்து விடக் கூடாது என ஆரம்பத்தில் போக்குக்காட்டிய ப.சி.யை, ஏறத்தாழ நிரந்தர திகார் வாசியாகவே வைத்துக்கொள்ள பாஜக டெல்லி தரப்பு நினைப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி எல்லோரையும் தன் அதிகாரத்தை காட்டிக் காட்டியே அடக்கி வைப்பதுதான் பா.ஜ.க.வின் மாஸ்டர் திட்டமாக உள்ளது என்கின்றனர்.