Skip to main content

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியால் சட்டசபைக்கு வராத தினகரன்! 

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும்  படு தோல்வியை சந்தித்தது. இதனால் அமமுக கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகி திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் தினகரனின் நம்பிக்கையாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இது தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அமமுக கட்சிக்கு அலுவலகம் கொடுத்த அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஈசாக்கி சுப்பையாவும் விலகுவதாக அறிவித்தார். இதனால் தினகரன் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. 

 

ttv


இந்த நிகழ்வுகளுக்கு பிறகு இன்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் சந்தித்து அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியதாக தெரிகிறது. மேலும் இந்த சட்டமன்ற கூட்ட தொடரில் தினகரன் பங்கேற்காதது குறித்து விசாரித்த போது, தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்து வருவதாலும் கடும் சோர்வில் தினகரன் இருப்பதாக சொல்கின்றனர். இதனால் தான் சட்டசபைக்கு தினகரன் வரவில்லை என்று தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு எதிர்கட்சிகளான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தாலும் தனியாக சட்டப்பேரவை நிகழ்வுகளில் தந்து உரையை நிகழ்த்தினார். ஆனால் தற்போது சட்டசபை கூட்ட தொடரில் பங்கேற்காதது அக்கட்சியினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.   

சார்ந்த செய்திகள்