Published on 14/08/2020 | Edited on 14/08/2020
சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்யும் வகையில் 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு கொண்டுவந்த சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை 2020, நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகளைப் பெற்று வருகிறது. தமிழகத்திலும் இதற்கான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வரைவு குறித்து ஆய்வு செய்யக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 12 பேர் கொண்ட இந்தக் குழுவில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர், பொதுப்பணித்துறை தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.