பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது தமிழக காங்கிரஸ். இதனை நடத்துவது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆர்ப்பாட்டத்தை எப்படி நடத்துவது என்பது பற்றி பேசிவிட்டு ஒரு கட்டத்தில், "நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சீமான் கட்சியினர் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக வாக்குகள் வாங்கியுள்ளனர். இத்தனைக்கும் பெரிய அளவில் போஸ்டர் அடிக்கவில்லை; விளம்பரம் செய்யவிலை; வாகன ஒலி பெருக்கி விளம்பரம் இல்லை . அப்படியிருந்தும் 30 ஆயிரம் வாக்குகள் வாங்குகிறார்கள் என்றால் அந்த கட்சி வளர்வது ஆபத்தானது. சீமான் கட்சி விஷச் செடிதான்" என்று சொல்லியிருக்கிறார்.
மேலும் சில விசயங்களை செல்வப்பெருந்தகை பேச, அதனை கண்டித்தார் கே.எஸ்.அழகிரி!