பாஜக மூத்த தலைவரும் , மாநிலங்களவை உறுப்பினருமான திரு. சுப்ரமணிய சுவாமி அவர்கள் நேற்று தமிழக அரசியல் குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் டிவீட் செய்தார். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழலில் உள்ளதாக தெரிவித்த சுவாமி , ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் சிறந்த கட்சியாக விளங்குவதாக டிவீட்டரில் தெரிவித்தார். மேலும் டிடிவி . தினகரன் தலைமையிலானா கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும் கூறினார். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் கட்சி தேசிய அளவில் ஒற்றுமையுடன் செயல்படும் கட்சியாக திகழ்ந்து வருவதாக சுப்ரமணிய சுவாமி தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதன் மூலம் டிடிவி தினகரனுக்கு தனது ஆதரவை சுப்ரமணிய சுவாமி மறைமுகமாக வழங்கியுள்ளார் என்றே கூறலாம். மேலும் தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மக்களவை தேர்தலை சந்திக்கும் நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவரின் கருத்து பாஜகவினரை அதிர்ச்சியடைய செய்தது. சமீப காலமாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை சுவாமி விரும்பவில்லை என்பதை அவரே கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக கட்சி மக்களவை தேர்தலை தனித்து சந்திக்க வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது தொடர்பாக பாஜக கட்சி மேலிடம் விளக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.சந்தோஷ்.சேலம்.